பொதுவாக கண்கள் பாதுகாப்பு விஷயத்தில் நம்மில் பலர் அலட்சியம் காமிப்பதால் சிறுவயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி போடும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த கண்களை பாதுகாக்க என்ன உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.பாதாமில் வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
2.இந்த பாதாமில் உள்ள விட்டமின்கள் அழற்சியை குறைக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
3.கண்ணை பாதுகாக்க தினமும் காலையில் எழுந்தவுடன் ஐந்து ஊற வைத்த பாதம் சாப்பிடலாம்.
4.அடுத்து ஆரஞ்சில் உள்ள வைட்டமின் C கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
5.இது கண்களை சுற்றி உள்ள இரத்த நாளங்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
6.கண்களை பாதுகாக்க ஆரஞ்ச் பழங்களை சாப்பிடுவதால் கண்புரை நோயையும் தடுக்கலாம். ஆரஞ்சை காலை மற்றும் மதிய உணவுக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.
7.அடுத்து உருளைக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் வறட்சியை தடுக்கின்றன.
8.கண்களை பாதுகாக்க .மாலை நேரத்தில் உருளைக்கிழங்கை கொண்டு சாட் செய்து சாப்பிடலாம்.
9.வைட்டமின் E நிறைந்துள்ள சூரியகாந்தி விதைகள் கண்களுக்கு நன்மை தரும்.
10.வயது கூடும் பொழுது ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகளை தவிர்த்திட சூரியகாந்தி விதைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவும்.