இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய் கடித்து ரேபிஸ் நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலதில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவரை ரேபிஸ் நோய் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீபத்தில் ரோட்டில் நடந்துச் சென்ற பள்ளி மனைவியை தெரு நாய்கள் துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.