இன்று செப்டம்பர் 24ம் தேதி முதல் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நவராத்திரி, தீபாவளி என விசேஷ நாட்களில் சொந்த ஊர் நோக்கி பயணப்படும் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை - நெல்லை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.50 சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது, 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று செப்.24ம் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதனால் கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,440 பயணிகள் வந்தே பாரத் ரயிலில் செல்லலாம். இதில் 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும். மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?