28-வது பிறந்தநாளை கொண்டாடும் துருவ் விக்ரம்! - 'பைசன்' பட சிறப்பு போஸ்டர் வெளியிட்டு மாரி செல்வராஜ் வாழ்த்து
Seithipunal Tamil September 24, 2025 02:48 PM

தமிழ் திரையுலகில் தனது இயற்கையான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் 'துருவ் விக்ரம்'. இவர் தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்' திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ரெஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.வருகிற தீபாவளி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் இப்படம் ஏற்கனவே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 23) தனது 28வது பிறந்தநாளை கொண்டாடும் துருவ் விக்ரமுக்கு, திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை மழையென வழங்கி வருகின்றனர்.அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், பைசன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் தனிப்பட்ட போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது எக்ஸ் பதிவில்,"என் அன்பின் துருவ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உன் கடின உழைப்பின் பலனாக, கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். நீ கண்டிப்பாக வெல்வாய்!"என்று உருக்கமான வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும்,ரசிகர்களுக்கு, பைசன் படத்தின் போஸ்டர் ஒரு சிறப்பு பரிசாக அமைந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.