Jananayagan: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு செல்வது என முடிவெடுத்தபின் அவர் நடித்த திரைப்படம் இது. தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் இது. அதேநேரம், தமிழுக்கு ஏற்றார் போலவும், விஜயின் அரசியல் எண்ட்ரிக்கும் ஏற்றார் போல் கதையில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் தொடர்பான இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியானது. ஒன்று ரசிகர்கள் அல்லது தொண்டர்களுக்கு முன் விஜய் செல்பி எடுப்பது போலவும் மற்றொன்று விஜய் தனது சாட்டை வைத்துக்கொண்டு நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது இந்த படத்துல அரசியல் தூக்கலாக இருக்கும் என்பது தெளிவாக தெரிந்தது.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அக்டோபர் 5ம் தேதி என முதலில் பேசி, கரூர் சம்பவத்தால் அதைமாற்றி அக்டோபர் 20ஆம் தேதியான தீபாவளியன்று வெளியிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஏனெனில் கரூர் சம்பவம் விஜய் மீது நெகட்டிவான இமேஜை உருவாக்கி இருப்பதால் அது சரியாகும் வரை காத்திருப்போம் என படக்குழு முடிவு செய்தது. ஒரு கட்டத்தில் தீபாவளிக்கும் வேண்டாம் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.
ஆனால் தவெக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று விஜய்க்கு சாதகமாக வந்திருப்பதால் தீபாவளி அன்றே ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட முடிவெடுத்திருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது.எனவே வருகிற தீபாவளிக்கு விஜயின் ட்ரீட்டாக ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அமையும் என கணிக்கப்படுகிறது.