"பணத்தை கட்டுங்க ATM மெஷினை வாங்குங்க.. அப்பறம் பயங்கரமா சம்பாதிக்கலாம்"- 150 பேரிடம் பல லட்சம் மோசடி
Top Tamil News October 14, 2025 09:48 AM

ஏ.டி.எம் மையம் அமைக்கக் உரிமம்  தருவதாகக் கூறி சுமார் 150 க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்டனர்.

கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ZPE ATM என்ற தனியார் நிறுவனம், ஏ.டி.எம் மையம் உரிமம் பெற முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் கடந்த 2023 இறுதியில் இருந்து விளம்பரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் ஏ.டி.எம் இயந்தரம் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், ஏ.டி.எம் பயன்பாட்டிற்கு ஏற்ப கமிசன் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். அதே போல ஏ.டி.எம் மையம் கடை வாடகையை 60 சதவீதம் நிறுவனமும், 40 சதவீதம் பயணாளிகளும் செலுத்த வேண்டும். மேலும் பண பரிவர்த்தனைகள் செய்யும் லாபத்தில் 60 சதவீதம் நிறுவனத்திற்கும், 40 சதவீதம் பயணாளிக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.   

இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் லட்சக்கணத்தில் பணத்தை கட்டி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். வைப்பு தொகையாக ரூ.2 லட்சம் பெற்று கொண்டு பத்திரத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதில் பணம் கட்டிய சிலருக்கு ஏ.டி.எம் இயந்திரத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு கொடுத்த ஏ.டி.எம் இயந்திரங்களும் ஒரு வாரம் மட்டுமே வேலை செய்துள்ளனர். அதன் பின் பணம் நிரப்பவும் ஆட்கள் வரவில்லை, இயந்திரமும் வேலை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதில் சிலர் பணத்தை முதலீடு செய்து பல மாதங்களாக காத்திருந்தும் இயந்திரமும் கொடுக்காமல், பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சுமார் 76 பேர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும், உரிமையாளர் துரைசாமி, ரம்யா துரைசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே கேரளாவை தனியார் தொழில் ஆலோசனை மையம் சார்பில், zpee ATM நிறுவனத்தில் 10 பேருக்கு ஏ.டி.எம் மையம் அமைக்க ரூ.17.50 முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.