போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இதில் இரண்டு நாடுகளிலும் பாதிப்பும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளன.
இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரில் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்இந்நிலையில் இந்தப் பயங்கர சம்பவத்துக்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் நடைபெறவிருந்த டி20 ட்ரை நேஷன் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம், இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆச்சர்யப்பட வைக்கும் ஆப்கானிஸ்தான்... விளையாடுவது வெற்றிக்காக அல்ல; மக்களுக்காக!