கயத்தாறு அருகே லோடு ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, அரசன் குளம் கீழ்த் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகன் முருகன் (45), லோடு ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு நான்குவழிச் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் குமாரசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்னால் மோதியயது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் முருகனை 108 ஆம்புலன்ஸில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுப்ரமணியனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?