பிக் பாஸ் சீசன் 9 வீட்டில் சூடு பிடித்து வரும் சண்டைகளும், சர்ச்சைகளும் இப்போது புதிய திசை எடுத்துள்ளன. இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த வாக்கெடுப்பில் “மோசமான போட்டியாளர்கள்” என்று தேர்வு செய்யப்பட்ட இருவர் — ஆதிரை மற்றும் அரோரா! இதையடுத்து, இருவரும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டாரிடம், “இந்த வாரம் நடந்து கொண்டதை வைத்து, ஒர்ஸ்ட் பெர்ஃபாமர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. முதலில் வந்த வியானா — அரோராவின் பெயரை சொன்னார். காமெடி கிங் கானா வினோத் — ஆதிரையின் பெயரை சொன்னார். கேப்டன் பதவி இழந்த துஷாரும், சுபிக்ஷாவும், எப்.ஜே-யும் ஒரே குரலில் ஆதிரையே குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் கெமியோ, கனி அக்கா, சபரிநாதன் ஆகியோர் அரோரா தான் மோசமானவர் என்றனர்.
இதையடுத்து பிக் பாஸ் அறிவித்தார் — “அரோராவும் ஆதிரையும் சிறைக்கு செல்ல வேண்டும்.” அந்த அறிவிப்பை கேட்டு அரோரா சிரித்து ரிலாக்ஸ் ஆனார்; ஆனால் ஆதிரையின் முகத்தில் கோபமும், அதிருப்தியும் வெளிப்பட்டது.
சமீப காலமாக இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் அநாகரிகமாகவும், “அடல்ட் கன்டன்ட்” கொடுப்பதாகவும் பார்வையாளர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். அதனால் இப்போது ரசிகர்கள் டபுள் எவிக்ஷனை கோரி, “தீபாவளி தமாகா எவிக்ஷன் பண்ணுங்க!” என்று பிக் பாஸிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் நந்தினி தானாக வீட்டை விட்டு வெளியேறினார். இயக்குனர் பிரவீன் காந்தி வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் கூறியிருப்பது: “மக்கள் என்னை வெளியேற்றணும் என்பதற்காகத்தான் அப்படி நடந்துக்கிட்டேன்,” என்கிறார். மேலும், “விஜய் சேதுபதி போட்டியாளர்களை பேச விடவே மாட்டார்; அவர்கள் சொல்ல வருவது கேட்கவே மாட்டார்,” எனும் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே, சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகக் கூறுகிறார்கள்:“அரோராவையும் ஆதிரையையும் ஒரே சிறையில் போட்டுட்டா, வைரல் கன்டன்ட் கேரண்டி!”
ஆனால் அதே நேரத்தில், இவர்களின் இரட்டை அர்த்த பேச்சும், ஆண் போட்டியாளர்களுடன் நடந்து கொள்ளும் விதமும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. “விஜய் சேதுபதி இவர்களை வெளியேற்றுவாரா?” என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் தயாரிப்பு குழு, புதிய வன்வாசிகள் — அதாவது, ஒயில்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்ப தீர்மானித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் புதிய முகங்களின் வருகையால் புதிய டிராமா தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.தற்போது ரசிகர்களை சிரிப்பால் கவர்ந்து வரும் முக்கிய போட்டியாளர் — கானா வினோத்! அவர் பேசினாலே ரசிகர்கள் ROFL!