'ஏகே 64' வில்லன் ஒருவேளை இவராத்தான் இருக்குமோ? அஜித்துக்கே டஃப் கொடுப்பாரே
CineReporters Tamil October 20, 2025 01:48 PM


அஜித் தற்போது அவர் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில்தான் அவருடைய முதல் சீசன் கார் ரேஸை முடித்துவிட்டதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் ஆரம்பத்திலிருந்து அவர் ரேஸில் செய்த சாதனைகள், அவர் பெற்ற விருதுகள் என ஒவ்வொன்றாக பட்டியலிட்டிருந்தார். அடுத்த சீசனுக்கு கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கிறார் அஜித். இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய 64 வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் அஜித் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. முற்றிலும் ரசிகர்களுக்கான படமாக ஆதிக் அந்த படத்தை எடுத்திருந்தார். அது நன்றாக வொர்க் அவுட்டாகியிருந்தது. ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

பாடலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியால்தான் மீண்டும் அஜித் ஆதிக் இணைந்து அவருடைய 64 வது படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அஜித் 64வது படத்தை யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்க குட் பேட் அக்லி வெற்றி ஆதிக்கை மீண்டும் அஜித்துடன் இணைய வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு பற்றிய செய்தி அவருடைய ரேஸ் முடிந்த பிறகு வெளியாகும் என கூறப்பட்டது.

அதற்கேற்ப முதல் சீசன் ரேஸ் முடிந்த நிலையில் இன்னும் சில நாள்களில் ஏகே 64 படம் பற்றிய அப்டேட் வெளியாகும். ஏகே 64 படத்தை பொறுத்தவரைக்கும் குறுகிய கால படப்பிடிப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் அல்லது பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ஹீரோயின் யார் வில்லன் யார் என்ற கேள்விதான் முதலில் எழும்.

அந்த வகையில் ஏகே 64 படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வித்யூத் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரு விழா மேடையில் வித்யூத்திடம் ‘விஜய்க்கு வில்லனா நடிச்சாச்சு. சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக நடிச்சாச்சு. அடுத்து யாருடன் நடிக்க ஆசை’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வித்யூத் ‘எனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை. நான் ஒரு முன்னணி ஹீரோவாக நடிப்பதற்கு முன் அஜித்தான் எனக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்தார்’ என்றும் வித்யூத் கூறியுள்ளார். அதனால் அடுத்த அஜித்தின் படத்தில் வித்யூத் வில்லனாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.