ஜாதி மறுப்புப் பெண்ணை மணந்ததால் ஏற்பட்ட பகை காரணமாக மாமனார் கோடாரியால் 9 மாத கர்ப்பிணி மருமகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டம் தாஹேகம் மண்டலத்தின் கெர்ரே கிராமத்தை சேர்ந்த ஷிவர்லா சத்தியநாராயணாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குமார் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நிலையில் இளைய மகன் சேகர், கடந்த ஆண்டு ஜாதி மறுப்புத் திருமணத்தில் தங்கள் வீட்டிற்கு எதிரே வசித்து வந்த ஸ்ரவாணியை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். சேகர் பி.சி. சமூகத்தைச் சேர்ந்தவர் , ஸ்ரவாணி எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர் இதனால் சேகரின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. சேகரையும் வீட்டில் அனுமதிக்கவில்லை இதனால் காதல் திருமணத்திலிருந்து, சேகர் தனது மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். அப்போதிருந்து, ஸ்ராவணி குடும்பத்தின் மீது சத்தியநாராயணா கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்த சூழலில், சனிக்கிழமை, சேகர் மற்றும் ஸ்ரவாணியின் பெற்றோர் சமையல் விறகு எடுக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.
ஸ்ரவாணி வீட்டில் தனியாக இருப்பதைக் கவனித்த சத்தையா, அவரது மூத்த மகன் குமார் மற்றும் மூத்த மருமகள் கவிதா ஆகியோர் ஸ்ரவாணி வீட்டிற்கு சென்று தாக்கினர். ஸ்ராவணி எவ்வளவு மன்றாடியும் 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரவாணியை கத்தி மற்றும் கோடரியால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரவாணியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்ரவாணியின் தந்தை தாளண்டி சென்னைய்யா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சத்தியநாராயணா, அவரது மகன் குமார் மற்றும் மருமகள் கவிதா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.