ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!
WEBDUNIA TAMIL October 20, 2025 04:48 PM

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தீபாவளியை முன்னிட்டு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக 'சம்மான் சலுகை' என்ற சிறப்பு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.1812 மதிப்புள்ள இந்தத் திட்டம், ஓர் ஆண்டுக்கு, அதாவது 365 நாட்களுக்கு முழு செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கியப் பலன்கள் பின்வருமாறு:

தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா. (அதன் பிறகு 40 Kbps வேகத்தில் வரம்பற்ற இணைய சேவை.)

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள்.

தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்.

கூடுதலாக 6 மாதங்களுக்கு BiTV பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் தினசரி செலவு ₹5-க்கும் குறைவாக இருப்பதால், இது மிகுந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற தேர்வாக உள்ளது.

இந்த 'சம்மான் சலுகை' அக்டோபர் 18 முதல் நவம்பர் 18, 2025 வரை ஒரு மாதம் மட்டுமே கிடைக்கும் வரையறுக்கப்பட்ட கால சலுகைத் திட்டமாகும்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.