3 ஹிட் கொடுத்தும் ட்யூடி படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?
CineReporters Tamil October 20, 2025 01:48 PM

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத ஹீரோ பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். ஜெயம்ரவி ஹீரோவாக நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்கா வகையில் இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். இப்படம் மிகப்பெரிய் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து வந்த டிராகனும் ஹிட் அடித்தது. இதனால் பிரதீப் ரங்க நாதனின் சினிமா மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி வந்துள்ள டிராகன் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் ட்யூட் படத்தில் நடித்ததற்காக பிரதீப் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ 12 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.