வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, இன்று அக்டோபர் 19ஆம் தேதி, மொத்தம் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நெல்லை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. பொதுமக்கள் அவசர தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது