#BIG NEWS : பாலிவுட் நடிகர் அஸ்ரானி காலமானார்..!
Top Tamil News October 21, 2025 10:48 AM

இந்தி படவுலகில் மூத்த மற்றும் பல்துறை நடிகர் ஸ்ரீ கோவர்தன் அஸ்ரானி, நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று(அக்டோபர் 20) மாலை 4 மணியளவில் காலமானார். அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் அஸ்ரானி கல்வி பயின்றார்.

'ஷோலே', 'மேரே அப்னே', 'பவர்ச்சி', 'அபிமான்' மற்றும் 'சுப்கே சுப்கே' போன்ற படங்களில் பன்முக கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் அறியப்பட்டார்.
 

நகைச்சுவையில் அவரது பங்களிப்பு மகத்தானது. 50 ஆண்டுகள் கலைத்துறை சேவையில் 350 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்த பெருமை பெற்றவர்.இவரது கேரக்டரில் அதிகம் ரசனையைபெற்றது, ரமேஷ் சிப்பியின் 'ஷோலே'யில் ஜெயிலராக நடித்ததுதான்.
 

அவரது மறைவுச் செய்தியால் திரையுலகமும் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.