தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். ரஜினியை நேரில் கண்ட ரசிகர்கள் தலைவா... தலைவா என உற்சாகத்தில் கத்தினர்.