பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கிறது. நேற்று தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் வீடு முழுவதும் அலங்காரத்தில் ஜொலித்தன. இந்த வாரத்திற்கான பிக்பாஸ் தலைவராக கனி பொறுப்பேற்றிருக்கிறார். தீபாவளி ஸ்பெஷலாக விஜய் சேதுபதி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பைசன் படக்குழுவை சேர்ந்த துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டனர்,
பிக்பாஸை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே பிரபலமானவர்களை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளே வரவழைத்து மேலும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி டிஆர்பியில் முதலிடத்தை தக்கவைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். ஆனால் இந்த சீசனை பொறுத்தவரைக்கும் முகமே தெரியாத பல பேர் இந்த நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக போட்டியாளர் ஆதிரையின் நடவடிக்கை சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சக போட்டியாளரான எஃப்ஜே உடனான அவரின் நடவடிக்கை பார்க்கும் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு அவருடைய பேச்சும் இருக்கிறது. பெரும்பாலும் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளையே அவர் பேசி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
ஏற்கனவே எஃப்ஜேவை ஒரு சமயம் ஆதிரை தொட்டு பேசும் போது ‘தொடாமல் பேசுங்க.. பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா’ என்று கேட்பார். அதற்கு ஆதிரை ‘பார்வதி வந்து புடிச்சா ஒன்னும் சொல்லமாட்டீங்களே’ என்று கேட்பார். அதற்கு எஃப்ஜே ‘அவங்க புடிச்சா எனக்கு பிடிக்கும்’ என டபுள் மீனிங்கில் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக இந்த சீசனை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில் மற்றுமொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. எஃப்ஜே படுத்துக் கொண்டிருக்க ஆதிரை மெதுவாக அவரது காலில் கையை வைத்து தடவ அது பார்ப்பதற்கு மிகவும் முகம் சுழிக்க வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவருமே ஆதிரையை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.