கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்த தோல் மருத்துவர் பிரவீன் (56) மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை, கடந்த 18-ம் தேதி, தோல் சிகிச்சைக்காக 21 வயதான இளம்பெண் பிரவீனின் கிளினிக்கிற்கு வந்தார். அப்போது, சிகிச்சை நடைபெறும் போது மருத்துவர் பாலியல் தொல்லை வழங்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக கிளினிக்கில் இருந்து வெளியேறி, சம்பவத்தை குடும்பத்தினருக்கு தெரிவித்தார். சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். மேலும் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.