மதுரை மாவட்டம் கோ.புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி வடிவேலன். தனது மனைவி கிருத்திகா, மகன் நவநீதனுடன் வசித்து வருகிறார். இவர் துப்பாக்கி சூடும் வீரராகவும் உள்ளார். மூத்த மகன் நவநீதன் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நவநீதன் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று வந்தார்.
துப்பாக்கி சுடும் போட்டிகளில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்ததால் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இதனால் வருத்தமடைந்த பெற்றோர் படிப்பில் ஆர்வம் இல்லாததால் நவநீதனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏர் ரைபில் வகை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து வீடு சென்ற பெற்றோர் மகனின் கோலத்தைக் கண்டு அழுது துடித்துள்ளனர். இது குறித்த போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவநீதன் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் கண்டிப்பினால் இளம் துப்பாக்கி சுடும் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!
இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!