வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு, நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, கடலுார் , செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ள 17 இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தேவையான உபகரணங்கள் உடன் முகாமிட்டுள்ளனர்.
அத்துடன், கனமழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால், நீர்வழித்தடங்கள் ஓரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.