லவ் யூ ஜிந்தாகி, நாகினி3, உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த பிரபல சின்னத்திரை நடிகை பவித்ரா புனியா, தன்னுடைய திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து நிச்சயதார்த்தம் நடந்ததையும் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த அறிவிப்பு, பிக்பாஸ் 14 மூலம் அறிமுகமான நடிகர் ஐஜாஸ் கானுடனான உறவில் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையின் பின்னணியில் எடுக்கப்பட்ட ரொமான்டிக்கான நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நடிகை பவித்ரா பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில், பவித்ராவின் வருங்கால கணவர் முழங்காலில் அமர்ந்து மோதிரம் அணிவிப்பது போன்ற தருணம் இடம் பெற்றுள்ளது. மற்ற புகைப்படங்களில் இருவரும் மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்ளும் காட்சிகள் காணப்படுகின்றன.
View this post on InstagramA post shared by पवित्रअ पुनिया (@pavitrapunia_)
ஆனால் விசேஷமாக பவித்ராதனது மணமகனின் முகத்தை மறைத்து வைத்ததுடன், அவரின் பெயரையும் வெளியிடவில்லை. அவரது பதிவில், “காதலில் கட்டுண்டேன். காதல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் மிஸ் பவித்ரா விரைவில் மிஸஸ் #NS’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு நடிகை கிரிஸ்ஸான், “எனக்குத் தான் முதலில் தெரியும்! வாழ்த்துகள்” எனக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். நடிகை சுப்ரியா ஷுக்லா, “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்று பதிவு செய்துள்ளார். ரசிகர்களும் “இறுதியாக 💍” என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக நடிகை பவித்ரா தனது காதலரைப் பற்றி அளித்திருந்த பேட்டியில், “அவர் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர். நடிகர் அல்ல. மிகவும் நன்றானவரும் மென்மையானவரும் ஆவார். நாங்கள் சில காலமாக காதலில் உறுதியாக இருக்கிறோம்” எனக் கூறியிருந்தார். கடந்த தீபாவளியையும் அவரது குடும்பத்துடன் அல்லாமல் அவரோடு கொண்டாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
பிக்பாஸ் 14 நிகழ்ச்சியின் போது ஐஜாஸ் கானை சந்தித்த பவித்ரா, அவருடன் நெருக்கம் ஏற்பட்டு 2020ல் நிச்சயதார்த்தம் செய்தார். நான்கு ஆண்டுகள் உறவில் இருந்து 2024ல் இருவரும் பிரிந்தனர். இப்போது புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய பவித்ரா புனியாவுக்கு ரசிகர்கள் நல்வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?