Lokesh: டீலில் விட்ட ரஜினி!.. தெலுங்கு சினிமா பக்கம் போன லோகேஷ்!.. அவரா ஹீரோ?!..
CineReporters Tamil October 23, 2025 09:48 AM


மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ் அதன்பின் கைதி படத்தை இயக்கி கவனிக்க வைத்தார்.அதன்பின் மாஸ்டர், விக்ரம், லியோ என படங்களை இயக்கி கோலிவுட்டில் பெரிய இயக்குனராகவும், குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராகவும் மாறினார்.

இவரின் படங்களை LCU என ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேநேரம் லியோ படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அடுத்து அவர் ரஜினியை வைத்து இயக்கிய கூலி படத்தின் கதை, திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே லோகேஷுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என பலரும் அவரை கடுமையாக சமூகவலைத்தளங்களில் விமர்சித்தனர்.

ஆனாலும் ரஜினி, கமல் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கப் போகும் புதிய படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்கிற செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் விமான நிலையத்தில் இதுபற்றி செய்தியாளர்களிடம் அப்டேட் கொடுத்த ரஜினி ‘நானும் கமலும் இணைந்து நடிப்பது உண்மைதான். ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என சொன்னார். எனவே இந்த படத்தை இயக்கப் போவது லோகேஷா? இல்லை வேறு இயக்குனரா? என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.

ஒருபக்கம் இந்த படத்திற்கு கதை எழுதும் வேலையில் லோகேஷ் ஈடுபட்டுருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போதைய நிலவரப்படி லோகேஷுக்கு ரஜினி தரப்பிலிருந்து பாசிட்டிவான சிக்னல் வரவில்லை என சொல்லப்படுகிறது. கூலி ரிசல்ட் ரஜினியை அப்செட் ஆக்கியிருக்கலாம் என்கிறார்கள்.

ரஜினியை சம்மதிக்க வைக்க லோகேஷ் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்தபடி இல்லை என்பதால், ஒருபக்கம் வேறு நடிகர்களை வைத்து படமெடுக்கும் முயற்சியிலும் லோகேஷ் இறங்கி இருக்கிறார். விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை எடுத்துள்ள கே.வி.என் நிறுவனம் லோகேஷிடம் பேசி இருப்பதால் அவர்கள் தயாரிப்பில் லோகேஷ் ஒரு தெலுங்கு படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

பிரபாஸ், பவன் கல்யாண் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தின் வேலைகள் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் பிரபாஸ் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. மேலும், பவன் கல்யாண் சரியாக ஷூட்டிங் வரமாட்டார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஓஜி படத்தின் பல காட்சிகளை அவரின் டூப்பை வைத்துதான் எடுத்தார்கள்.

எனவே இந்த படத்தின் வேலைகள் உடனே துவங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிக்கப் போகிறாரா? ரஜினி, கமல் படத்தை இயக்கப் போகிறாரா? அல்லது பிரபாஸ், பவன் கல்யான் படத்தை இயக்கப்போகிறாரா என்பதில் குழப்பம் எடுத்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.