நெல்லிக்காய் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் போகும் தெரியுமா ?.
Top Tamil News October 23, 2025 10:48 AM

பொதுவாக இன்று பலருக்கும் இருக்கும் உடல் பிரச்சினைகள் என்று பார்த்தால்  உடல் பருமன் ,நீரிழிவு ,அஜீரண கோளாறுகள் .இதற்கு முக்கிய காரணம் இப்போது மாறிவிட்ட உணவு முறை யும் ,வாழ்க்கை முறையும்தான் .இது போன்ற பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு என்ன இயற்கை வைத்தியம் செய்யலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.சிலருக்கு உடல் பருமன் இருக்கும் .ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை மற்றும் மாலை இரு வேளை சாப்பிட உடல் பருமன் குறையும்.
2.சிலருக்கு முகப்பரு இருக்கும் .சாதிக்காய், சந்தனம் மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு குறையும்.
3.சிலருக்கு முதுகு வலியிருக்கும் ,பவழ மல்லியின் இலையை மண் சட்டியில் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு அது 1 டம்ளர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை குடித்து வர முதுகு வலி குறையும்.
4. .சிலருக்கு சுகர் இருக்கும் .தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
5..சிலருக்கு வாய் நாற்றம் இருக்கும் .சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6..சிலருக்கு வீக்கமிருக்கும் .நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
7..சிலருக்கு விக்கல் இருக்கும் ,நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
8..சிலருக்கு அஜீரணம் இருக்கும் .ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
9..சிலருக்கு பித்த வெடிப்பு இருக்கும் .கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.