சென்னை மாநகரில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்பு நிலவரங்கள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “காலை 4 மணி முதல் மழை பாதிப்பு குறித்த ஆய்வுகளை நேரடியாக பார்த்து வருகிறோம், முகாம்களின் உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை மாநகராட்சி கட்டுப்பட்டு அறைக்கு நானே நேரடியாக சென்றேன். அங்கு சில புகார்களை கேட்டிருந்து நானே அந்த பகுதிகளுக்கு வருகிறேன் என்று கூறினேன்.
டெல்டா மாவட்டங்கள் மழை பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு பார்வையிடுவதற்கு அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் பேசியிருக்கிறார். எல்லா இடத்திலும் எச்சரிக்கையாக இருக்கிறோம். பருவ மழை காரணமாக பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார்.