கடந்த 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தீப்பொறிகளாய் வெடித்தது. புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஒவ்வொரு வீடும் ஒளி, சிரிப்பு, மகிழ்ச்சியில் மூழ்கியது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் நாட்டிலேயே இல்லை என்றாலும், இதயத்தில் இந்தியாவை தாங்கி தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர்.மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த ஆண்டுக்கே சிறப்பு,தீபாவளி பண்டிகைக்கு அதிகாரபூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரலாற்றிலேயே முதன்முறையாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாரம்பரிய விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்த நினைவூட்டும் தருணத்தின் வீடியோவை வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.
இந்த விழாவில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துள்சி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்று நிகழ்வை பிரகாசமாக்கினர்.