தொடர்ந்து பல வாரங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக திடீரென சரிவு கண்டுள்ள நிலையில், இப்போது தங்கம் வாங்கலாமா? அல்லது தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதா? எவ்வளவு குறையும்? என்று இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் இடையே தங்கம் விலை குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், “தங்கம் விலை உயர்வை எதிர்பார்த்து பல முதலீட்டாளர்கள் கடன் பெற்று முதலீடு செய்திருந்தனர். இப்போது தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் போதே லாபம் ஈட்டும் நோக்கில் அவர்கள் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தையில் விற்பனை அதிகரித்து விலை குறைந்துள்ளது. அதே சமயம் உலகளாவிய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திலிருந்து தற்போது பங்குசந்தைக்கு மாறியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்றுள்ளதும் தங்க விலைக்கு எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“தங்கம் விலை வேகமாக ஏறினால், ஒரு கட்டத்தில் அது குறையும். தற்போது பல முதலீட்டாளர்கள் லாபம் எடுக்க தங்கத்தை விற்று வருவதால் விலை சரிகிறது. இந்த ‘விற்பனை அலை’ ஒரு கட்டத்தில் நின்று விடும். அதன்பின்பு மீண்டும் தங்கத்தின் விலை ஏறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எந்த நேரத்தில் மீண்டும் ஏற்றம் தொடங்கும் என்பதை கணிக்க முடியாது” என்கின்றனர்.

அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைத்தால், தங்கம் விலை மீண்டும் உயரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உள்ளது. தற்போதைய நிலைமையில், தங்கம் விலை இன்னும் சில நாட்கள் மாறுபாடுகளுடன் காணப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?