kombu seevi First Single: இன்று வெளியாகும் கொம்பு சீவி பர்ஸ்ட் சிங்கிள்
CineReporters Tamil October 25, 2025 12:48 AM

தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறார். விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படம் தோல்வி அடைந்தது.  அடுத்து வந்த மதுரை வீரனும் சரியாக போகவில்லை.

விஜயகாந்தின் உடல் நிலை காரணமாக சண்முக பாண்டியன் இரண்டு ஆண்டுகளுக்கு மேல்  சினிமாவில் நடிக்கவில்லை.  சமீபத்தில் வெளியான படை வீரன் படம் ஓரளவிற்கு பேசப்பட்டது. இப்படத்தின் துவக்க விழாவில்விஜயகாந்த் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சண்முக பாண்டியன்  நடித்து அடுத்து வெளிவரும் படம் கொம்பு சீவி. சரத்குமார் இணைந்து நடிக்கும் இப்படத்தினை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இதனால் இப்படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கொம்பு சீவி படத்தின் முதல் பாடலான உன்ன நான் பார்த்த என்ற பாடல் இன்று வெளியாகிறது. இதனிஅ இப்படக்குழு உறுதி செய்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.