தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவான இரண்டாவது தாழ்வு பகுதி ஆகும். தற்போது இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26ஆம் தேதி இது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் சூறாவளியாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும் சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் அக்டோபர் 27ஆம் தேதி சென்னைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் உருவாகும் பட்சத்தில், அதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த “மொந்தா” என்ற பெயர் சூட்டப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!