
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக உருவாகும் இதற்கு 'மோந்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இன்று உருவான இந்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதை தொடர்ந்து, அக்டோபர் 27-ஆம் தேதி காலையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
'மோந்தா' புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும்.
அக். 26: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 27: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக். 28: திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை தொடரும்.
Edited by Mahendran