வங்கிகளில் கணக்கு தொடங்குபவர்கள், வங்கி லாக்கர்களில் நகை உள்ளிட்டவைகளை வைத்திருப்பவர்கள் அதற்கு பொறுப்பாக வாரிசுதாரர் ஒருவரை நியமிக்கலாம் என்ற விதி அமலில் இருந்தது.
இதில் வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்கள் இனி வாரிசுதாரர்களாக 4 பேரை நியமித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.