Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் காடு என்று இருக்கும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கியதில் இருந்து சண்டை மற்றும் பிரச்சினைகளாக தான் சென்று கொண்டிருக்கிறது. அதிகம் தெரியாத முகங்கள் என்பதால் ரசிகர்கள் முதலில் தனிப்பட்ட ஒருவருக்கு ஆதரவை கொடுக்கவில்லை.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் தற்போது கனி மற்றும் சபரி தலைமையில் ஒரு டீம் ஆகவும், பார்வதி தலைமையில் ஒரு டீம் ஆகவும் இரு குழுவாக பிக் பாஸ் வீடு பிரிந்து இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சபரி, கனி மற்றும் விக்ரம் உள்ளிட்ட மூவரிலிருந்து தான் ஒருவர் டைட்டிலை தட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இவர்களுடைய ஆசைக்கு வேட்டு வைக்கும் விதமாக வைல்ட் கார்டு எண்ட்ரி குறித்த தகவல்கள் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவலின் படி பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் வைல்ட் கார்ட்டாக ஜோடியாக உள்ளே வருகின்றனர்.
பிரபல தொகுப்பாளரான பிரஜினுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இன்றளவும் அவருக்கு இருக்கும் அந்தக் கூட்டத்திற்காகவே டைட்டிலை வெல்லும் அதிக வாய்ப்பு பிரஜின் பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறது. இதனால் சபரிக்கு இருந்த வாய்ப்பு தற்போது குறைய தொடங்கிவிட்டது.
தற்போது இவர் மட்டுமல்லாமல் சன் டிவியில் பிரபல சீரியலான ரோஜாவில் அர்ஜுன் கேரக்டரில் நடித்தவர் சிபு சூரியன். இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதனால் இவரும் டைட்டில் போட்டியில் மட்டுமல்லாது நிகழ்ச்சிக்கு அதிக கன்டென்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இவர்களை எல்லாம் விட தற்போது இன்னொரு சுவாரஸ்ய எண்ட்ரியாக பாக்கியலட்சுமி புகழ் திவ்யா கணேஷ் உள்ளே வர இருக்கிறார். இவரும் மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு இரண்டாவது ஜோடியாக பல மாதம் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆதீரை சீரியலில் கம்ருதீன் நடந்து கொள்வதை அரோராவிடம் சொல்லி பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதால் கம்ருதீன் நிம்மதி அடையும் நேரத்தில் இன்னொரு பரபரப்பாக இவர் எண்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது.