நாகர்கோவிலில் ரவுடி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று இரவு லாயம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் கையும் களவுமாக பணம் பெறும் போது பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரித்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையில் சில மணி நேரங்களுக்குள் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதால், இன்று அதிகாலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்க்கு புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படும் 2 போலீஸ் ஏட்டுகள் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷை இடைநீக்கம் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அன்பு பிரகாஷ் மீது இதற்கு முன்பும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தது. மேலும், வருமானத்துக்கு அதிகமான சொத்து வைத்திருப்பதாகவும், அதில் திருட்டு நகைகள் இருந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறை முன்பே சோதனை நடத்தியது. தற்போது லஞ்ச வழக்கில் மீண்டும் சிக்கியுள்ளதால், அவர் மீது மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!