அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள பிரபல ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட ஆண்டு விழா, இந்த ஆண்டும் உற்சாகமாக நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி, கல்லூரி வளாகம் முழுவதும் விழா சூழல் நிலவியது.ஆனால், எதிர்பாராத விதமாக நேற்றிரவு சுமார் 8.23 மணியளவில், பல்கலைக்கழகத்தின் வெளியே திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. மகிழ்ச்சியான நிகழ்ச்சி நொடிகளில் பதட்டமாக மாறியது. துப்பாக்கிச் சத்தத்தால் பகுதி முழுவதும் கலக்கம் ஏற்பட்டது.
முதல் கட்ட தகவலின்படி, 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது, அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஒரு சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கம் இதுவரை வெளிச்சம் பார்க்கவில்லை. அதேசமயம், ஹோவார்டு பல்கலைக்கழகப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.