சென்னை மக்களே உஷார்... 950கிமீ தூரத்தில் புயல்... !
Dinamaalai October 26, 2025 12:48 PM

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 5:30 மணிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று (25-10-2025) காலை 5:30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) சுமார் 440 கிலோ மீட்டர், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 950 கிலோ மீட்டர், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலைத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும், 27-ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி மாலை ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிரப்புயலாக கடக்கக்கூடும்.

IMD தகவலின்படி, அச்சமயம் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வீதத்தில் வீசக்கூடும். இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகம் அடையும் அபாயமும் உள்ளது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடையிடையே மின்னல், இடி, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.