தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை அருகே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது பூர்வீக நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளன. ஓய்வு கிடைக்கும் நாட்களில் அவற்றை பராமரிப்பது போன்ற வேலைகளை அண்ணாமலை செய்து வருகிறார்
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவுக்கு Everything else - outside - is just noise! என்கிற ஆங்கில கேப்சனையும் பகிர்ந்துள்ளார். விவசாய வேலைகளை செய்வது, மாட்டு சாணத்தை அள்ளிச் செல்வது மற்றும் தீவனம் கொடுப்பது போன்ற பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டுள்ள வீடியோ பேசும் பொருள் ஆகியுள்ளது.
இதற்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளது அயர்ன் செய்த வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு யாராவது சாணம் அள்ளுவார்களா என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by K. Annamalai (@annamalai_kuppusamy)