பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 06 மற்றும் 09 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறற்று, வாக்கு எண்ணிக்கை 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றையதினம் முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன. இந்த நிலையில், மாநிலத்தின் அணைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்வது நிறைவடைந்து தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்த சூழலில், தேர்தல் வியூக காரரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த 03 பேர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

கஞ்ச் தொகுதியில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி சார்பில் சசி சேகர் சின்கா களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றதற்கு, பா.ஜனதாவின் அழுத்தமே காரணம் என பிரசாந்த் கிஷோர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், கஞ்ச் தொகுதியில் பா.ஜனதா போட்டி வேட்பாளரான அனூப் குமார் ஸ்ரீவத்சவாவை கட்சி ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.
அதாவது, மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவரான அவருக்கு கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை என்பதால், அவர் சுயேச்சையாக அந்த தொகுதியில் களமிறங்குகிறார். கோபால்கஞ்ச் தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான அனூப் குமாரை ஆதரிப்பதாக பிரசாந்த் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார். அவரும், தனது கட்சியும் பா.ஜனதாவின் அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை ஆதரிப்பதன் மூலம் பா.ஜனதாவின் மருந்தை அவர்களுக்கே கொடுக்க இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.