ஜப்பானில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் மினாமிசோமா நகருக்கு அருகில், டோக்கியோவுக்கு சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில், 40.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.1 என பதிவாகியுள்ளது.

அச்சத்துக்கு காரணமான இந்த அதிர்வால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை. அதிகாரிகள் நிலைமையை கவனித்து வருவதாகவும், பிந்தைய அதிர்வுகள் ஏற்படுமா என கண்காணித்து வருகின்றனர்.

ஜப்பான் அமைந்துள்ள பகுதி, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ எனப்படும் புவித் தகடுகள் உராயும் பகுதியில் இருப்பதால், அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்வது இயல்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!