நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு பழங்களில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த வகையில் திராட்சை பழம் ஜூஸாகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு .இந்த ஜூஸ் மூலம் மெட்டபாலிசம் மேம்படும் ,இரத்த அழுத்தம் குறையும் ,உடல் எடை குறையும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம் ...
1.நமக்கு ஆரோக்கியம் தரும் திராட்சை ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன,
2.இந்த கிரேப் ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
3.இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
4.மேலும் திராட்சை சாறு வைட்டமின் சி உள்ளது , இது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவசியம்.
5 மேலும் கிரேப் ஜூஸில் உள்ள விட்டமின் உங்கள் உடலில் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.:
6.திராட்சை ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் , புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
7.மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன
8.திராட்சை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன, அவை மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
9.இதன் ஊட்டச்சத்துக்கள் நினைவகம், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
10.. மேலும் தினம் திராட்சை சாறு குடிப்பது உங்கள் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது,
11.மேலும் இந்த திராட்சை ஜூஸ் குடிப்பது உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.