வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரமடைந்ததால், வானிலை பாதிப்பு காரணமாக ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வரும் நான்கு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து புறப்பட இருந்த சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, விசாகப்பட்டினத்திலிருந்து காலை 9.45 மணிக்கு சென்னை வர இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மாற்று ஏற்பாடுகளுக்காக காத்திருந்தனர். வானிலை நிலைமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், இன்னும் சில விமானங்களும் ரத்து செய்யப்படலாம் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்தின் பல நகரங்களுக்கு செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் தாக்கம் காரணமாக விமான சேவைகள் அடுத்த சில மணி நேரங்கள் வரை பாதிக்கப்படலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!