இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி பயணம்... தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்து கொள்கிறார்!
Dinamaalai October 28, 2025 05:48 PM

இன்று முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கிருந்து நாளை தென்காசி பயணம் செய்ய உள்ளார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை செல்லும் முதல்வர், அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்துகிறார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 24ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், மழை காரணமாக அந்நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அக்டோபர் 28ம் தேதி முதலமைச்சர் முதலில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கிறார். அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்த பின், சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். நாளை அக்டோபர் 29ம் தேதி தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக மதுரைக்கு பயணம் செய்து அங்கேயே இரவு தங்க உள்ளார்.

அக்டோபர் 30ம் தேதி காலை, பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு, முதலமைச்சர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் ஆலயத்தில் மரியாதை செலுத்தி, பின்னர் சென்னை திரும்ப உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.