Mamitha Baiju: "எனக்கு டாக்டர் ஆகணும்னுதான் ஆசை; ஆனா" - நடிகை மமிதா பைஜூ
Vikatan October 29, 2025 03:48 AM

'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மமிதா பைஜூ.

சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார்.

தவிர விஜய்யின் 'ஜனநாயகன்', 'சூர்யா 46', 'தனுஷ் 54' படத்திலும் மமிதா பைஜூ நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாள ஊடகமான 'மனோரமா'வுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

தந்தையுடன் மமிதா பைஜூ

"சிறுவயதில் என்னுடைய அப்பாவைப் போல எனக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

நான் அப்பாவின் கிளினிக்கிற்குச் சென்றால் அங்குள்ள அனைவரும் என்னை 'பேபி டாக்டர்' என்று அழைப்பார்கள்.

நோய் குணமடைந்து மகிழ்ச்சியாக அப்பாவிடம் வந்து நன்றி கூறும் நோயாளிகளைப் பார்த்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!

அந்தத் தொழில் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. சினிமா என் வாழ்க்கையில் தற்செயலாக வந்ததுதான்.

நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 'சர்வோபரி பலக்காரன்' என்ற படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தை என் அப்பாவின் நெருங்கிய நண்பரான அஜி அங்கிள்தான் தயாரித்தார்.

மமிதா பைஜூ

அவர்தான் என்னைத் தொடர்ந்து ஆடிசனுக்குப் போகச்சொன்னார். அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

மெதுவாக, நடிப்பை நான் ரசிக்கத் தொடங்கினேன், சினிமாவுடன் எனக்கு ஒரு பிணைப்பு உருவானது.

என் பெற்றோரிடம் சினிமாதான் என் வாழ்க்கைப் பாதை என்று சொன்னேன். அவர்களும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்" என்று மமிதா பைஜூ பகிர்ந்திருக்கிறார்.

Mamitha Baiju: 'எனக்கு 15 கோடி சம்பளமா?'- மமிதா பைஜூ விளக்கம்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.