தொடர் சரிவில் தங்கம்... நவம்பரில் மேலும் குறைய வாய்ப்பு!
Dinamaalai October 28, 2025 05:48 PM

தீபாவளிக்கு முன் உச்சத்தை தொட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக விலை தினந்தோறும் சரிவை சந்தித்து வருகிறது.

சென்னையில் கடந்த 23ஆம் தேதி தங்கம் சவரன் ரூ.92 ஆயிரமாக இருந்தது. அதன்பின் 24ஆம் தேதி ரூ.91,200 ஆகக் குறைந்தது. 25ஆம் தேதி மீண்டும் சற்று உயர்ந்து ரூ.92 ஆயிரம் ஆக இருந்தது. ஆனால் நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கு விற்பனையாகியது. இன்று மேலும் ரூ.1,200 குறைந்து சவரன் ரூ.90,400, கிராம் ரூ.11,300 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்துள்ளது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரமாக இருந்தது. தற்போது கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், கிராம் ரூ.165 என விற்பனையாகி வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கலாம் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.