இந்தியாவில் இன்னும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லாத நிலை தொடர்கிறது. ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023–24 கல்வியாண்டு தரவுகளின்படி, நாட்டில் மொத்தம் 7,993 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையே நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த பள்ளிகளில் 20,217 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் மேற்கு வங்கம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு மட்டும் 3,812 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை என்றும், அந்த பள்ளிகளில் 11,965 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தெலுங்கானாவில் 2,240 பள்ளிகளிலும், மத்திய பிரதேசத்தில் 463 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டிலும் 11 பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் ஒரு மாணவரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களிலும் மாணவர்கள் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 2023–24 கல்வியாண்டில் 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையே நடைபெறாதது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!