கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு!
Dhinasari Tamil October 26, 2025 06:48 AM

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு! Dhinasari Tamil %name%

மதுரை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) . சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில்
அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.