கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி (26) . இவர் கோவை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆறுமுகம் என்ற காவலருடன் திருமணம் நடந்தது.
புகாரளித்த சந்தியா தேவி
அவர்தான் என்னை காதலிப்பதாக சொல்லி பெற்றோரிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்தார். எங்களுக்கு ஒரு கைக்குழுந்தையும் இருக்கிறார்.
திருமணமான பிறகு தான் அவரின் சுயரூபம் தெரிந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறிய வயதிலேயே அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அதை மறைத்துவிட்டார்.
ஆறுமுகம் முதல் திருமணம்
மேலும் திருமணமான பெண் ஒருவருடனும் தொடர்பில் இருக்கிறார். ஆறுமுகத்தின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் உரையாடல் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவர் இப்போதும் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார். ஆனால், `தான் போலீஸ் என்பதால் எதுவும் செய்ய முடியாது. அதை மீறி என்னைப்பற்றி புகார் கூறினால் உங்கள் குடும்பத்தை சும்மா விட மாட்டேன்’ என்று மிரட்டுகிறார்.
ஆறுமுகம் சந்தியா திருமணம்ஆறுமுகம் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். அவரால் எங்கள் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பல பெண்களை ஏமாற்றும் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.