தூத்துக்குடியில் கழுத்தில் கத்திய காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜோதிமணி மகன் ஜார்ஜ் (51). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று மாலை திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 8000 ஆகும்.

இந்த சம்பவம் குறித்து தென் பாகம் காவல் நிலையத்தில் ஜார்ஜ் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தட்டி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மேல சண்முகபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சங்கர் மகன் சேர்மகுமார் (24) என்பவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தார்.

மேலும் அவருடன் வந்த மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே தூத்துக்குடி மேல சண்முகபுரம் இரண்டாவது தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றதாகவும் அவர் சுதாரித்ததால் அவரிடமிருந்து செல்போனை பறிக்க முடியவில்லை என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?