சுப முகூர்த்த நாட்களும் வார இறுதி விடுமுறையும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வழக்கமான பேருந்துகளுடன், இன்று முதல் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து இன்று 365 பேருந்துகளும், நாளை 445 பேருந்துகளும், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு பகுதிகளுக்கு 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் நிலையத்தில் இருந்து இன்று மற்றும் நாளை மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
முன்பதிவு நிலை:
இன்று பயணம் செய்ய 9,164 பேர், நாளை 8,575 பேர், அக்டோபர் 26 அன்று 16,108 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையைக் கருத்தில் கொண்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சூரசம்ஹாரம் விழா: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்:
அக்டோபர் 27ம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்டோபர் 26 அன்று திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்செந்தூரிலிருந்து திரும்பும் பயணத்திற்கும் 27ஆம் தேதி அதிகாலை முதல் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?