கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, வரத்து குறைந்ததையடுத்து தலைநகர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென உயர் ஏற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து ஒரு மாதமாக தக்காளி குறைந்த விலையில் கிடைத்த போது, நேற்று முதல் விலை எகிறியதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய காலங்களில் கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்தது. வெளி சந்தைகள் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.15 முதல் ரூ.40 வரை கிடைத்தது. மழையால் விளைச்சல் பாதிப்படைந்து வரத்து குறைவதாகவும், இதன் விளைவாக விலை ஒரே நாளில் கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

சில்லறை விற்பனைக் கடைகளில் இதைவிட ரூ.10 முதல் ரூ.15 வரை கூடுதலாக விற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், பீன்ஸ் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை இருந்த பீன்ஸ் தற்போது கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை கோயம்பேட்டிலேயே விற்பனையாகியுள்ளது. வெளி சந்தைகளில் இது மேலும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?