காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், கரையோர மக்கள் எச்சரிக்கை பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் கீழணை 9 அடி உயரத்தில் நிரம்பியுள்ளது. இதன் மூலம், வடவாறு வழியாக வீராணம் ஏரி மற்றும் கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் விவசாய பாசனத்துக்கு வாய்க்கால்கள் மூலம் நீர் அனுப்பப்படுகிறது. கடந்த 20-ந்தேதி, பருவமழை தீவிரம் காரணமாக கல்லணை மற்றும் மேலணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர், கீழணையில் வந்து சேரும் நீர் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி அளவில் திறக்கப்பட்டது.

இப்போது, தொடரும் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வரத்து அதிகரிப்புக்கு ஏற்ப படிப்படியாக உபரிநீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?