கரூரில் நடந்த கூட்ட நெரிசல்: சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரே நாளில் 4 மனுக்கள் விசாரணை..!
Webdunia Tamil October 27, 2025 11:48 PM

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.

இந்த வழக்குகளில், அரசியல் சாலை காட்சிகளுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்க கோரும் பொதுநல வழக்கு ஒன்று அடங்கும். அத்துடன், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, 'வாபஸ் பெற' என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதவிர, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படும் புகாரில், ஆதவ் அர்ஜுனா தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரித் தாக்கல் செய்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு மனுக்கள் ஒரே அமர்வில் இன்று விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.